• Breaking News

    தாம்பரத்தில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையங்கள் சங்கம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி தலைவர் சீமான் தமிழ்வேந்தன் அவர்களின் ஆலோசனைப்படி செயலாளர் பீனிக்ஸ் பாரி, சங்க பொருளாளர் டாக்டர் எஸ்.முருகன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. பேரணியை சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் சங்கீதா, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி தாம்பரம் மாநகராட்சியில் இருந்து பல்வேறு சாலைகள் வழியாக, சண்முகம் சாலையில் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    No comments