கும்மிடிப்பூண்டி; உணவு பொருட்களின் காலாவதி தேதியை குறிப்பிடாவிட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...... உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை..... - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

கும்மிடிப்பூண்டி; உணவு பொருட்களின் காலாவதி தேதியை குறிப்பிடாவிட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...... உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மகேஸ்வரி எச்சரிக்கை.....

 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்திடும் வணிகர்களுக்கான உரிமம் வழங்குதல், புதுப்பித் தல் மற்றும் புதிய பதிவிற்கான சிறப்பு முகாம் நேற்று நடை பெற்றது.

ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமிற்கு வட்டார உணவு பாது காப்பு அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கத்தலைவர் கோபால், ஊராட்சி மன்ற செயளர் ஷோபன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில், உணவுபாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது:-

உணவு பொருட்கள் விற்பனை செய்திடும் கடைகளுக்கு உரிய உரிமம் இல்லா விட்டால் முதல் முறை எச்சரிக்கையும், பின்னர் அபராத மும் விதிக்கப்பட்டு வருகிறது.

சிப்ஸ், பன் போன்ற பேக்கரி பொருட்களின் மீது உற்பத்தி செய்திட்ட நாளில் இருந்து குறிபிட்ட காலாவதி நாட்களையும் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட் களை விற்பனை செய்திடும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப் படும்.கடும் நடவடிக்கை கடைகளில் விற்பனை செய்திடும் உணவு பொருட் கள் மீது அதன் காலாவதி தேதி குறிப்பிடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருட்கள் விற்பனை செய் திடும் கடைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த சிறப்பு முகாமில். இதில் ஆரம்பாக்கம் பகுதி யில் உணவு பொருட்கள் விற் பனை செய்திடும் வணிகர் கள் அனைவருக்கும் அதற்கான பதிவு சான்றுகளுடன் கூடிய உரிமங்கள் வழங்கப் பட்டது.இந்த முகாமில் ஆரம்பாக் கம்பகுதியைச்சேர்ந்த70-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங் கேற்று பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment