அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன். இவர் மாநில அம்மா பேரவை இணைச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குணசேகரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், குணசேகரன் இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments