கர்நாடகாவில் சாலையில் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
கர்நாடக மாநிலம் மைசூஉருவில் இருந்து கிளம்பிய அரசு பஸ் ஒன்று, பன்னூர் பகுதி அருகே வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற தொடங்கியது. இதனை கண்ட ஓட்டுநர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களில் பஸ்சின் முன்பகுதியில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments