கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிட பணி..... திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.....
கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.12 லட்சம் மதி;பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய நல கழிப்பிட பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சி 9 வது வார்டு பகுதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்விஜெகதீசன் மற்றும் பேரூராட்சி அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments