ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்
இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாததால், சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் ஹோட்டல்களில் குழப்பம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments