• Breaking News

    தோரணமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா...... 27 நட்சத்திர மரக்கன்றுகளுக்கு பூஜை செய்யப்பட்டது....


    தோரணமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி 27 நட்சத்திர மரக்கன்றுகளுக்கு பூஜை மற்றும் ஸ்ரீவிருட்சராஜபூஜை செய்யப்பட்டது.

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அடிவாரத்தில் ஞாயிற்க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . அதன் படி கடந்த ஆடிக் கிருத்திகை ஞாயிறு காலை ஆல் , வேல் இணைந்து  பல நூற்றாண்டுகளாக  வளருமிடத்தில் ஸ்ரீ விருட்ச ராஜ பூஜை நடைபெற்றது . தொடர்ந்து கன்னிமாரம்மன், சப்த கன்னியருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மகளிருக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் 27 நட்சத்திர மரக் கன்றுகளுக்கு பூஜை செய்யப்பட்டது . பின்பு கட்டணமில்லா அர்ச்சனை சீட்டு வழங்கப்பட்டு சிவஸ்ரீ காளி ராஜ குருக்கள் மூலம் சங்கல்பம் செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு குறள் , சுலோகம் போன்றவற்றை சொல்லச் சொல்லி சான்றிதழ் வழங்கப்பட்டது .மேலும் பட்டிமன்ற பேச்சாளரும் , ஆன்மிகவாதியுமான மணிகண்டன்; குடும்பத்துடன் தோரணமலை முருகனை  தரிசித்துடன், முத்துமாலைபுரம் கிராமத்து மாணவ மணிகளை சந்தித்து உரையாடினார்.

    மேலும் கடையம் விவி ஸ்போர்டஸ் அகாடமி மற்றும் தோரணமலை முருகா பக்தர் குழு இணைந்து நெகிழி ஒழிப்பு பிரசாரம் மேற்கொண்டனர்.. பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு மஞ்சள் நிற பிரசாத பைகள் வழங்கப்பட்டது . 2200 க்கும் மேற்பட்டோருக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    No comments