வாணாதிராஜபுரம்புரத்தில் மீலாதுன் நபி விழா மதரஸா மனாருல் ஹுதாவின் 39 ஆம் ஆண்டு துவக்க விழா...... கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்பு.....
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரம் முஸ்லிம் புதுத்தெருவில் மாபெரும் மீலாதுன் நபி விழா மதரஸா மனாருல் ஹுதாவின் 39 ஆம் ஆண்டு துவக்க விழா முத்தவல்லி அப்துல்லத்தீஃப் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து மதரஸாவின் ஆசிரியர் யாகூப் அலி முன்னிலையில் மதரஸாவில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பயான்,கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர் பின்னர் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஊர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ஜமாஅத்தார்கள் முஸ்லிம் இளைஞர் மன்றத்தினர்கள் விழா குழுவினர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments