ஏஐடியூசி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட 39 வது ஆண்டு பேரவை நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலம் தனியார் திருமண மண்டபத்தில் 39 வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேரவையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கொடியேற்றி துவங்கி வைத்தார்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். ரவி வரவேற்றார். மாவட்டத் தலைவர் வீ. தியாகராஜன் அஞ்சலி தீர்மானமும் மாநிலத் தலைவர் அ. சாமிக்கண்ணு தொடக்க உரையாற்றினர்.
மாநில பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் வேலை அறிக்கையையும்,மாநில பொருளாளர் தி. கோவிந்தராஜன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனர்.பேரவை கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் வி.எம். மகேந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆர். இளங்கோவன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே. செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய முன்கூட்டியே முன்னேற்பாடுகள் செய்து தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
என்சிசிஎப் என்ற கூட்டுறவு நிறுவனத்திற்கு நெல் கொள்முதல் செய்யும் முறையை கைவிட்டு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கும் டென்டருக்கு மாற்றாக நேரடியாக கூலி வழங்கும் முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் நிர்வாக அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின் போது சிறு சிறு விபத்து ஏற்படுகிற போது உரிய மருத்துவ செலவு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
ஆறு தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 வீதம் 60 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.இறுதியாக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என்.அய்யப்பன் நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments