• Breaking News

    உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை..... டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனம்.....


    இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர்  N. ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

     திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் சமூக செயல்பாட்டாளர் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர் முருகானந்தம் என்ற மாற்றுத்திறனாளியை படுகொலை செய்யப்பட்டிருப்பதை டிசம்பர் 3 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இவர் மாற்றுத்திறனாளிகளின் பல பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம்  அளவு எடுத்துச் சென்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக வாதாடக்கூடிய ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் சில பொதுநல வழக்குகளையும் எடுத்து நடத்தி வெற்றி கண்டுள்ளார். இவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல பொது சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும் எனவே இவரை கொலை செய்தவர்களை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கொலையுண்ட அந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிசம்பர் 3  இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                               மேலும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அவருக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியும் (ரூ 10,000,000) வழங்க வேண்டும். சமூக இயலாமை பிரிவு சமூகத்தின் மீது(SC,ST) வன்கொடுமை நடக்கும் போது எப்படி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறதோ அதுபோல உடல் இயலாமை (மாற்றுத்திறனாளிகள்) உள்ளவர்கள் மீது இது போன்ற வன்கொடுமை நிகழும் போது அவர்களுக்கென ஒரு தனி சட்டம் (வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை போல்) கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     



    No comments