தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ன் சீர்கேடுகளை கண்டித்து அஸ்தினாபுரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அஸ்தினாபுரம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அஸ்தினாபுரம் ஜமீன் ராயப்பேட்டையில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
டி.ஜெயக்குமார் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஆர்.அருணாசலம், தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, விஜயநாராயணன் ஆகியோர் வரவேற்புரையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கனிதா சம்பத், கழக வர்த்தக அணி இணைச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன்,கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மற்றும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேசியதாவது:
தாம்பரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் காரணமாக இந்த விடியா திமுக அரசை கண்டித்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட செய்யத் தவறிய தாம்பரம் மாநகராட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகளை எடுத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 6 மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள சூழ்நிலையில் இந்தியாவிலேயே அமைதி இல்லாத மாநிலமாக கஞ்சா, ஹேராயின் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாடுகின்ற கலாச்சாரம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
இதில் மாவட்டக் கழக அவைத் தலைவர் ஏ.எம்.பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருமான பா.தன்சிங்மாவட்ட கழக பொருளாளர் பி.கே.பரசுராமன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சபரீஷ் மணிகண்டன்,மாவட்ட அணி செயலாளர்கள் பா.ராஜப்பா, ஜி.எஸ் புருஷோத்தமன், ஜி.எம்.சாந்தகுமார், பா.காசிராஜ பாண்டியன்,பகுதி, நகர கழகச் செயலாளர்கள் ஆர்.எஸ்.சுபாஷ், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பா. அப்பு என்கிற வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் வி.ஜெகநாதன், முன்னாள் அரசு வழக்கறிஞர் குரோம்பேட் எம்.கே.சதீஷ், எம்.கூத்தன், எல்லார் செழியன், முன்னாள் ஏ.கோபிநாதன், இ. சம்பத்குமார்,ஜெ.சீனுபாபு,மாமன்ற உறுப்பினர் சி. சாய்கணேஷ், வாட்டர் ராஜ், அஸ்தினாபுரம் பகுதி வார்டு செயலாளர்கள் கராத்தே ஸ்ரீதர், ஆர்.வெங்கடேசன், இ.பத்மநாபன், என். ராகவன். என்.குணா, கே.கோபால், எம். தேவ ராஜ், எம்.ஐ.டி.ஜி குமார், ஐ.லோகநாதன்,வி.ஞானவேல், எம்.கே வில்லாளன், மா.அன்பு,டி.ராஜேந்திரன். ஆர்.தியாகராஜன், எம் கே சண்முகம்,எல்.கோபிநாத், ஜேசுராஜ், முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர், லலிதா சுரேந்திரன், கார்த்திகேயன், சர்குணம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments