திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரணி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம், இன்று முதல் அதன் புதிய கட்டிடத்தில் தனது பணிகளைத் தொடங்கியது.
ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பழைமையான பேரூராட்சிகளில் ஒன்றான ஆரணி பேரூராட்சி, நீண்ட காலம் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்தது. பின்னர் 1986-ஆம் ஆண்டு ஜி.என். செட்டி தெருவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் உறுதித்தன்மையை இழந்ததோடு, மழைக்காலங்களில் அலுவலகத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து நின்றதால் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனையடுத்து, பழைய கட்டிடத்தை இடிக்க அரசு அனுமதி வழங்கியது. தமிழக அரசின் மூலதனப் பெரு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1.29 கோடி (ஒரு கோடியே 29 லட்சம்) மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகம் மற்றும் காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை கடந்த 24.11.2025 அன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 13) முதல் புதிய கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பொருட்டு, அலுவலகத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பேரூராட்சித் தலைவர் எம்.ராஜேஸ்வரி துணைத் தலைவர் க. சுகுமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி அலுவலகப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி பணி நியமன குழு உறுப்பினர் . டி.கண்ணதாசன், கவுன்சிலர்கள் . பூ..சந்தானலட்சுமி குணபூபதி, சுபாஷ்னி, ரகுமான் கான் கௌசல்யா தினேஷ்குமார், எம்.குமார், கே. கே. சதீஷ், சுஜாதா ரவி, சுகன்யா தினேஷ் குமார், பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அலுவலக இளநிலை உதவியாளர் கருணாநிதி, பணியாளர்கள் கிருஷ்ணன், பாரதி மற்றும் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிய கட்டிடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




0 Comments