பொதுமக்களை சந்திக்க அஞ்சும் பள்ளத்தூர் பேரூராட்சி தலைவர்..... செயல் அலுவலரையே தலைவராக ஏற்றுக் ஏற்றுக்கொண்ட பொதுமக்கள்.....


சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி வார்டு எண் ஆறு இதற்கு உட்பட்ட பகுதி நாராயணபுரம் கீழக்குடியிருப்பு, இந்த குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளின் தூசு மற்றும் கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து சுகாதாரக் கேடு மற்றும் தொற்றுநோய் ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பேரூராட்சி தலைவர் சாந்தி சிவசங்கர் என்பவரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்த நிலையில், அவர் அந்த மனுவினை பெறாமல் வெளியேறி சென்று விட்டதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தில் வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.

இதை அறிந்த செயல் அலுவலர் வெளியூரில் இருந்து விரைந்து வந்து பொதுமக்களின் மனுவினை பெற்று கோரிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி தெரிவித்தார் இதன் பேரில் செயல் அலுவலரையே தாங்கள் தலைவராக இருப்பதாகவும், தங்கள் பகுதிக்குள் தலைவர் வந்தால் தடுத்து நிறுத்துவோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறி கலைந்து சென்றனர்.

Post a Comment

0 Comments