பொன்னேரி தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து செயல்வீரர்கள்,வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்   சிறுணியம் பலராமன் தலைமையில் ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 22 ஆம் தேதி பொன்னேரிக்கு வருகை தரவுள்ள கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



 இந்நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா, கே எஸ் விஜயகுமார், சக்கரபாணி, சோழவரம் ஒன்றிய செயலாளர் சம்பத்,சுந்தரவதனம், மீஞ்சூர் ஒருங்கிணைந்த ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார்,ஜி எஸ் வினோத், இ ஆர் தமிழ்ச்செல்வன், தர்ம பிரகாஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள்  அம முக சங்கர் ராஜா, பாஜக சுந்தர், பாமக பிரகாஷ், புரட்சி பாரதம் சரவணன் மாவட்ட நிர்வாகிகள் சுமித்ரா குமார் மாங்கோடு மோகன். பத்மஜா ஜனார்த்தனன் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்..உள்ளிட்ட கழக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments