திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் முஸ்லிம் நகரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இங்குள்ள மசூதியில் ஜமாத் மற்றும் ஏபிஜேஅப்துல் கலாம் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக அரேபிய மொழி தினமும் மாலையில் பாடசாலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் வகுப்பில் நல்லொழுக்கம் , விழிப்புணர்வு , நற்பண்புகள், போதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் பாடசாலை வகுப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மசூதியில் படிக்கும் மாணவ மாணவிகளின் அரேபிய மொழியில் குர்ஆன் ஒப்புவித்தல் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகளுக்கு குர்ஆன்நூல், மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு மசூதி ஜமாத் மற்றும் ஏபிஜேஅப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பாராட்டினர் விழாவில் ஜமாத் மற்றும் முஸ்லிம் நகர் பெண்கள் ஆண்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.



0 Comments