நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு அரசு மடிக்கணினிகளை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் வழங்கினார்


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் திட்டமலையில் அமைந்துள்ள - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்கும்  விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு அரசு மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நம்பியூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் ,  நம்பியூர் பேரூர் செயலாளர் கருப்பட்டி ஆனந்தகுமார் , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்  சரஸ்வதி பழனிசாமி , கீதா முரளி , கல்லூரி முதல்வர் முனைவர்  சூரியகாந்தி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471, 6382211592.


Post a Comment

0 Comments