உத்வாகநாத சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு ரூபாய் 2.80 லட்சம் மதிப்பில் திருமண விழா...... மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு......
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் 4 ஜோடிகளுக்கு ரூபாய் 2.80 லட்சம் மதிப்பில் திருக்கோவில் சார்பில் திருமண விழா நடத்தப்பட்டது புதுமண ஜோடிகளுக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ் ராஜகுமார்,மயிலாடுதுறை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன்,முன்னாள் மயிலாடுதுறை எம்எல்ஏ சத்தியசீலன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இதில் அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம்,உடைகள்,முகூர்த்த மாலைகள்,கட்டில், பீரோ உள்ளிட்ட 35 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.அப்போது திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன்,கோவில் செயல் அலுவலர் விமலா,ஆய்வாளர் கண்ணதாசன்,செயல் அலுவலர் சுந்தர்ராஜன்,மாவட்ட பிரதிநிதி கண்ணன்,முன்னாள் திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவானந்தம், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,சதீஷ் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள்,அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments