• Breaking News

    தமிழகத்தில் 40 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்..... டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.....

     


    நிர்வாக காரணங்களுக்காக காவல்துறையில் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் ,   காவல் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதாவது,  துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டிஎஸ்பியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், மானாமதுரி டிஎஸ்பியாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    No comments