• Breaking News

    அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல்

     


    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்களின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார்.

    இதில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகலா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக அந்த பள்ளி ஆசிரியரான நெல்லை மாவட்டம் வடுகன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 43) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை ஆசிரியர் தங்கவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments