தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நியமனம்
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் பொதுக்குழு மாவட்ட தலைவர் சித்திக் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர்-நஜிமுதீன், செயலாளர்- சல்மான்கான், பொருளாளர்- ஷாஜஹான், துணை தலைவர்- சைபுல் கரீம், துணை செயலாளர்- ஹசன் நூர்தீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் அப்துல்லாஹ்ர கலந்து கொண்டார். இதேபோன்று புதுகை நகரக் கிளையில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் செய்யது மசூத்,முகமது ஆசிப், அமீர் அப்பாஸ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
No comments