• Breaking News

    ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் மனநல கூட்டம் நடைபெற்றது


    பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உளவியல் மற்றும் மனநல மருத்துவர்கள் சார்பில் மனநலம் எனும் தலைப்பில் கூட்டம் நடத்தப்பட்டது.  பள்ளியின் நிர்வாகி அருட்திரு அந்தோனி அ. குரூஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சகாயராணி வரவேற்றார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் முகம்மது இப்ராஹிம் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் மன உறுதி காக்கும் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையின் மனநல நல்லாதரவு மன்றம் குறித்து விளக்கினார். அரசின் மனநல ஆலோசனை எண் 14416 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மனநல ஆலோசகர் தேவநேசன், நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கற்பக வள்ளி, மீனா ராணி, பொன் மதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவிகள் மிகவும் பயனுள்ள விதமாக இக்கூட்டம் அமைந்ததாக தெரிவித்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சே.அந்தோணி அருள் பிரதீப் தலைமையில் ஆசிரியர்கள் ஜானி மற்றும் அந்தோணி செய்திருந்தனர்.

    No comments