• Breaking News

    புதுக்கோட்டை: அண்ணன்,தம்பியை கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்..... போலீசார் தீவிர விசாரணை......

     


    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் அவரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன்(32) மற்றும் கார்த்தி(28).கண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று (24.7.25) இரவு இவர்கள் இருவரும் காமராஜபுரம் அருகே உள்ள அடியார் குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளது.

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த்தா தலைமையிலான போலீசார் இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்.

    சம்பவ இடத்தில்  ஆய்வுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட கண்ணன் மற்றும் கார்த்தி உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் தடவையில் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அண்ணன் தம்பி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    No comments