• Breaking News

    அரசு பேருந்தின் தானியங்கி கதவு திடீரென சாலையில் பறந்ததால் பரபரப்பு

     


    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவத்தின் போது அந்த சாலையில் வந்த மூன்று இருசக்கர வாகனப் பெண்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து  தவிர்க்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மத்தியிலும், ஆணமலை கோட்டூர் போன்ற பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை, கொங்கலப்பம்பாளையம் பிரிவு வழியாகப் பொங்காலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்துள்ளது.இந்த நிலையில், அந்த சாலையில்  பின்னால் 3 பெண்கள் ஸ்கூட்டியில்் பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையில் விழுந்த கதவு, நேரடியாக அந்த பெண்கள் மீது விழவில்லை என்பது பெரிய அதிர்ஷ்டம்.

    அவர்கள் அனைவரும் திகைத்து நின்ற நிலையில், பேருந்து டிரைவரும், கண்டக்டரும் உடனடியாக பேருந்தை நிறுத்தி கதவை மீட்டு எடுத்துள்ளனர். பின்னர், அந்த கதவை மீண்டும் வாகனத்தில் வைத்து பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதாகவும், இது போன்ற திடீர் சீரமைப்புகள் செய்யப்படாமை பெரிய அபாயங்களை ஏற்படுத்தும் என்பதையும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    No comments