குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சியை அமைச்சர் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
குற்றாலத்தில் சாரல் திருவிழாவையொட்டி குற்றாலம் - ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி குற்றாலம் - ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைகுமார் முன்னிலை வகித்தனர். இந்த மலர் கண்காட்சியில், பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை திரவிய பொருட்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பலவகைப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய மலர் கண்காட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தாலியா, கார்னேசன், கெர்பரா, ஆஸ்டர், கட்ரோசஸ் வகைகள், ஹெலிகோனியா, லில்லி, கிரை சாந்;திமம்,டியூபர்ரோஸ், பேர்ட் ஆர் பாரடைஸ், அ;ட்ரோ மெரியா, கிளாடியோலஸ், மேரி கோல்ட் மற்றும் அந்தோரியம் மலர்களை கொண்ட பூக்கூடைகள் மனங்களை கவரும் வகையில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்கள் மகிழும் வண்ணம் சின்சான் கார்ட்டூன், 14 அடி உயரத்தில் குற்றாலம் பிரதான அருவி ஆகியவை அலங்கார மலர்களை கொண்டும், பூச்செடிகளை கொண்டு கண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாசனைப் பொருட்கள் கண்காட்சியில் கிராம்பு, ஜாதிக்காய்,இலவங்கபட்டை, கசகசா, குறுமிளகு, ஏலக்காய், வெள்ளை குறுமிளகு, ஜாதிபத்திரி, சீரகம், சோம்பு, மல்லி, கருஞ்சீரகம், மிளகாய் விதை, வெந்தயம், அன்னாசிப்பூ, மராட்டிமொக்கு ஆகிய 17 வகையான பொருட்களை கொண்டு 7 அடி உயரம், 9 அடி அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட “வண்ணத்து பூச்சி” பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறிகளான கேரட், முள்ளங்கி, கத்தரி, பூசணிக்காய், குடைமிளகாய், சுரைக்காய், சேனைக்கிழங்கு, அன்னாச்சிபழம் மற்றும் தர்பூசணி மற்றும் பழங்களை கொண்டு “குற்றால மந்தி” உள்ளிட்ட வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தென்னை, செவ்வாழை, பனை மற்றும் கூந்தல்பனை பொருட்களை கொண்டு அலங்கார நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் மலர்களால் ஆன “யானை உருவம்”| அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகம் மூலமாக பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் முருங்கை சூப், சோள பணியாரம், கேழ்வரகு சீவல், மக்காசோளபுட்டு, தினை, முறுக்கு, அங்கன்வாடிகளில் பயன்படுத்தபடும் இணை உணவு மாவு கொழுக்கட்டை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய உணவும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவீன தோட்டக்கலை தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் செங்குத்து தோட்டம் மாடித்தோட்டம் ஆகியவற்றின் மாதிரி அமைப்புகள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை
அலுவலர்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. குறவர் சமுதாயத்தினரின் வாழ்வியல் இயற்கை அங்காடி மூலம் தேன், உலர்ந்த அத்தி பழம், அத்தி பொடி மற்றும் மூலிகை பொடிகள் உள்ளிட்ட இயற்கை உணவின்மூலம் செய்யப்படும் மருத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டு வளர்ச்சித் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், ஆவின், பனை நண்பன் மற்றும் தேன் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
No comments