• Breaking News

    ஈரோடு: மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 31-12-2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் திருக்குறள் ஆர்வமும் புலமை மிக்க ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தொடர்ந்து திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

    இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அதனை செயல்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 16.07.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் திருக்குறள் திருப்பணிகள் தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் உறுப்பினர்களான மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், தமிழ்ச் செம்மல் விருதாளர்கள் சத்தியமங்கலம் முத்து ரத்தினம், எண்ணமங்கலம் பழனிச்சாமி, சிக்கய்ய அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேதநாயகம், தளவை தமிழ் சங்க செயலாளர் கலைச்செல்வன் மற்றும் துணை இயக்குநர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

     இக்குழுவின் மூலமாக திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் உள்ள திருக்குறள் ஆர்வலர்கள் 3 அமைப்புக்கள் மற்றும் குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாரத்தில் அரை நாள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments