பெருங்களத்தூர்: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் பெருங்களத்தூர் - பீர்க்கண்காரணை அனைத்து வியாபாரிகள் நலசங்கத்தினர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஏழை எளியோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பெருங்களத்தூர்- பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் கெ.பாலமுருகன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இ.எம்.சீனிவாசன், வணிகர் சங்க செயலாளர் சுப்புராமன், பெருங்களத்தூர்- பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மகேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இ.எம்.சீனிவாசன், பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள் பார்த்தீபன், பாலாஜி, சிதம்பரநாதன், வழக்கறிஞர் தினேஷ், பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ராஜா, எத்திராஜ், நவநீதகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments