• Breaking News

    டாக்டர் பி.எஸ்.இராவ் நினைவு நாளை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்

     


    ஸ்ரீ சைதன்யா பள்ளியின் முன்னாள் நிறுவன தலைவருமான டாக்டர் பி.எஸ்.இராவ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சைதன்யா  பள்ளி நிறுவனர் டாக்டர் ஜான்சி லட்சுமி பாய் அவர்களின் தலைமையில் 20 மற்றும் 21 ஜூலை 2024 குரு பூர்ணிமா தினத்தன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இதில் ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான சிறந்த கல்வியை வழங்கும் பொருட்டு 1986 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் டாக்டர் பி.எஸ்.இராவ் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் ஆகியோரால் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனமானது தொடங்கப்பட்டது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக கல்வியில் ஆற்றி வரும் மிகச் சிறப்பான சேவையை பயணமாக தற்போது இந்தியாவில் 18 மாநிலங்களில் 900ருக்கும் மேற்பட்ட பள்ளிகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனமானது அனைத்து துறைகளிலும் மாணவர்களை முதன்மையானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் உருவாக்கி விடும் வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுவே டாக்டர் பி.எஸ்.இராவ் அவர்களின் லட்சியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த மாபெரும் அன்னதானம்  2024ஆம் ஆண்டு பத்ரபத பூர்ணிமா, மகாளய அமாவாசை, சரத பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, கார்த்திகை தீபம், மகா பூர்ணிமா, 2024 ஆம் ஆண்டு சித்ரா பூர்ணிமா, ஜேஷ்டா பூர்ணிமா, இந்த விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதன் வகையில் 10.07.2025 ஆம் தேதியன்று குரு பூர்ணிமா தினத்தையொட்டி ஏராளமான பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் டாக்டர் பி.எஸ்.இராவ் அவர்களின் நினைவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments