• Breaking News

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா..... ஆலங்குளத்தில் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்.....


    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடர்பாக ஆலங்குளத்தில் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடில் அமைத்து 15 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி வழிபட்டு வருவர். கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் பக்தர்கள், பொதுமக்கள் தங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 24ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நேற்று நடைபெற்றது.  கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா, உதவி ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி  வருகிற 22ந்தேதி மட்டும் தனியார் வாகனங்களில் கோவில் செல்ல வேண்டும் என்றும் 23ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்தில் செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தரப்பில் 20, 21ந்தேதிகளில் கோவிலுக்கு தனியார் வாகனம் மூலம் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து காமராஜர் வெண்கல சிலை பராமரிப்பு மற்றும் கல்வி வளர்ச்சி கமிட்டி சார்பில் எம்.எஸ்.திரவியம் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் சுமார் 150 ஆண்டுகளாக 15 நாட்கள் குடில் அமைத்து தங்கி வருவது வழக்கம். பேருந்து வசதி இல்லா காலத்தில் கூட மாட்டு வண்டியில் செல்வர். இப்போது வனத்துறை விடுக்கும் கட்டுப்பாடு பக்தர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை போல பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

    No comments