• Breaking News

    தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.... நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.....


    தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்.

    தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வேளாண்மைத் துறை சார்பில் குறுவை சாகுபடி 2025-26-இல் தொகுப்பு திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு உயிர் உரங்கள் ரூ.180 மதிப்பில் மானியமாகவும், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு துத்தநாக சல்பேட் ரூ.750 மதிப்பில் மானியமாகவும், வேளாண்மை ஊட்டச்சத்து இயக்கம் 2025-26இன் கீழ் 06 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தளைத் தொகுப்பு இலவசமாகவும், தோட்டகலைத்துறை மூலம் ஆடி பட்டம் காய்கறி விதைத் தொகுப்பினை 25 பயனாளிகளுக்கு இலவசமாகவும் வேளாண்மை ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு பழச்செடித் தொகுப்பினை இலவசமாகவும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு பவர் டில்லர் ரூ. 1,20,000 மதிப்பில் மானியமாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 239 மனுக்களுக்கு 10 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்  அகில் தம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி. ச. கனகம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா. தண்டாயுதபாணி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெசிமா பானு மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    No comments