பாவூர்சத்திரம்: முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்
பாவூர்சத்திரத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ஷாலி மேரி; ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன் குமார், சங்கர், தினேஷ்குமார் , ராகவேந்திரா, விக்கி உள்ளிட்;டோர் அதிமுகவிலிருந்து விலகி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவ பத்மநாதன்;, ஒன்றிய செயலாளர் சீனித்துரை ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கிளைச் செயலாளர் சுந்தர்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், சங்கர், மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டியன், பொறியாளர் அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் கபில் தேவதாஸ், சற்குணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments