தலைஞாயிறு அருகே மணக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பாக நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகில் மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலை பள்ளியில் 24.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இம் முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,கலைஞர் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை போன்ற மனுக்கள் கொடுக்கப்பட்டு துறை சார்ந்த அலுவலர்கள் கணினியில் பதிவு செய்து அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர் மேலும் தோட்டக்கலை சார்பாக முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மருந்து மற்றும் விதைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும் நாகை திமுக. மாவட்ட செயலாளர் கெளதமன் மாநில வேளாண்மை ஆலோசனை குழு உறுப்பினரும் தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார் மற்றும் திருக்குவளை வட்டாட்சியர் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments