மனைவியின் தகாத உறவால் கொலை செய்தேன்...... கணவன் பரபரப்பு வாக்குமூலம்.....
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியில் விஷ்ரூத் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுருதி (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கார் டிரைவர் ஆக வேலை பார்க்கும் விஷ்ரூத் சென்னையில் பணிபுரியும் போது ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதில் ஸ்ருதி திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வரும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதில் நேற்று முன்தினம் காலை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை விஷ்ரூத் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது பற்றி அவர் கூறும்போது நான் ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ருதி வேறொரு நபருடன் பழகி வந்த நிலையில் அந்த விவகாரம் எனக்கு தெரிய வந்ததால் நான் அவரை கண்டித்து பின்னர் சொந்த ஊருக்கு அழைத்து வந்தேன்.
பின்னர் அங்கு மீண்டும் வேறொரு நபருடன் சுருதி பழகி வந்தார். இது தொடர்பாக எனக்கும் என் மனைவிக்கும் இடையே தகறாறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் நான் அவரை கொலை செய்தேன் என்றார். மேலும் தாய் இறந்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழந்தைகளும் பரிதாபமான நிலையில் இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments