தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு..... திட்டபணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர்.....
தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் திட்டபணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர், மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் முன்னிலையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர். தென்காசி நகரில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து பார்வையிட்டும், புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் அறிவுசார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், புதிய மாவட்ட மருந்து கிடங்கு அமைப்பது குறித்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையத்தினையும், அடவி நயினார் அணையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புளியரை காவல்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், முதன்மை செயலாளர் முனைவர் சீனிவாசன் சட்டமன்ற உறுதிமொழிக் குழு உறுப்பினர்களான, எம்.எல்.ஏ.க்கள் அருள் அவர்கள் (சேலம் மேற்கு),.கோ.தளபதி (மதுரை வடக்கு), நல்லதம்பி (திருப்பத்தூர்), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகர்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, சார்பு செயலாளர் திருமதி.த.பியூலஜா, மாவட்டவன அலுவலர் அகில்தம்பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை, கட்டிடம் மற்றும் பராமரிப்பு) அனிட்டா சாந்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர். பிரேமலதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர்.லாவண்யா, மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments