• Breaking News

    பண்பொழியில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்


    தென்காசி தெற்கு மாவட்டம், பண்பொழி பேரூர் திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் பண்பொழியில் நடைபெற்றது.

    பேரூர் செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் ஹபீப்நிஷா, மாவட்ட பிரதிநிதிகள் சேகுக்கண்ணு, மங்களவிநாயகம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேல்சாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் திவான் ஒலி வரவேற்றார்.

    கூட்டத்தில் பண்பொழி பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் அணி நிர்வாகிகள், மகளிரணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்;. முடிவில் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நாகூர் மீரான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பண்பொழி பேரூர் திமுக மற்றும் பேரூர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    No comments