தூ.நாயக்கன்பாளையம் பகுதியில் கான்கிரீட் வடிகால் வசதி மற்றும் கான்கிரீட் சாலை...... அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்......
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் , வாணிப்புத்தூர் பேரூராட்சி தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில், 15வது நிதிக் குழு மானியம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் 13 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வடிகால் மற்றும் காங்கிரீட் சாலைகள் அமைத்திட பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூ.நாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் , வாணி புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சிவராஜ் , வாணி புத்தூர் பேரூர் செயலாளர் சேகர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். கந்தசாமி , ஒன்றிய அவைத்தலைவர் கருப்பசாமி , வாணி புத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர் மற்றும் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் , திமுக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments