ஈரோடு மாவட்டம், பகுஜன் சமாஜ் கட்சி(BSP)மேற்கு மண்டலம் ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம். ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் சேதுபதி வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் பழனிச்சாமி பகுஜன் சமூகத்தின் வரலாறு மற்றும் சுயமரியாதை அரசியல் பற்றிய சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தலைவர் சந்தோஷ்,பவானிசாகர் சட்டமன்ற துணை தலைவர் முருகன் , சத்தியமங்கலம் ஒன்றிய தலைவர் கண்ணன் மற்றும் கோபிசெட்டிபாளையம் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள்ஒன்றியம் வாரியாக 100 பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிப்பது. சத்தியமங்கலம் ஒன்றிய தலைவராக கண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment