நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு..... பெயர் பலகை இல்லாத அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை......
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்ற அரசுப் பேருந்தில் நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் கள ஆய்வில் இறங்கினார்.
அப்போது அந்தப் பேருந்தில் பெயர் பலகை இல்லாததை கண்டறிந்த அமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அதனை அடுத்து ஆமினி பேருந்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளை வைத்துள்ளதை கண்டித்து அவற்றை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.ஏற்கனவே இதே போன்று அரியலூர் அருகே கள ஆய்வில் இறங்கிய அமைச்சர் சிவசங்கரை அரசு பஸ் ஓட்டுனர், கண்டக்டர் யார்? எனக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் மீண்டும் களப்பணியில் அவ்வபோது ஈடுபட்டுள்ளார்.
No comments