• Breaking News

    வேளாங்கண்ணி அருகே தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை

     


    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவில் அவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது வீட்டில் கம்பவுண்ட் கேட்டை கழற்றி வைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் மாடிக்குச் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த அகமது நாச்சியாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மேலும், அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். மேலும், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

    இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்த அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments