பல்லாவரத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க மாவட்டம் வரும் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்லாவரம் பகுதியில் பகுதி செயலாளர் ஜெய்பிரகாஷ் ஏற்பாட்டில் புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அச்சிடப்பட்ட சிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் ஆகியோர் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் கார்கள் போன்றவற்றில் ஸ்டிக்கர் ஒட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் பல்லாவரம் பகுதி கழக அவை தலைவர் எம்.குமார், பல்லாவரம் பகுதி கழக துணைச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி எஸ்.சந்தானம், டாக்டர் பிரேம்சந்த், மாவட்ட பிரதிநிதி கௌதம், கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா, லிங்கராஜ், வட்ட கழகச் செயலாளர்கள் அக்ரம்கான், ராஜேஷ், ராஜ்பரத், மூர்த்தி, அன்பு, விஜயகுமார், ராஜேஷ் கண்ணா, பிரகாஷ் குமார், பிரசாந்த், கலைமதி பூங்காவனம் ரேவதி தனலட்சுமி மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் மகளிர் அணி உட்பட ஏராளமானோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments