திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது வடக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து கழக வளர்ச்சிக்காக வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அப்போது கேட்டுக் கொண்டார் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக கழக வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரை நியமனம் செய்ததற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் கோபால் நாயுடு முன்னாள் சேர்மன் கே எம் எஸ் சிவக்குமார் அம்மா பேரவையினை செயலாளர் முல்லை வேந்தன் உள்ளிட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர் .
No comments