• Breaking News

    கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹத் ஜமாத் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது


    கடையநல்லூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹத் ஜமாத் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி மாவட்ட அனைத்து கிளைகளின் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் முன்னிலை வகித்தார்.

    மாநில செயலாளர் தரமணி யாசர் பங்கேற்று,  அணி நிர்வாகிகள் ஆற்றவேண்டிய களப்பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி பேசினார் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஷேக் தாவூத்,மருத்துவ அணிச் செயலாளர் அப்துல்லாஹ், மாணவரணி செயலாளர் ரபீக் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் அப்துல் பாஸித்,மாவட்ட துணை செயலாளர்கள் பீர் முஹம்மது , முஹமதலி பிலால், மாவட்டத்தின் அனைத்து கிளைகளின் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் பாசித் நன்றி கூறினார்.

    No comments