• Breaking News

    புதுப்பட்டி ஊராட்சிக் குவாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும்..... அமைச்சரிடம், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை......


    புதுப்பட்டி ஊராட்சிக்கு  வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும் என அமைச்சரிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்  புதுப்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து அலுவலகம் அருகேயுள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த உயர் மட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது திடீரென்று எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டனர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் பால விநாயகம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு மனு வழங்கியுள்ளார் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

    அதேபோல் புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரத்தில் புதிதாக உயர் மட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது அந்த ஊருக்கும் வாசுதேவநல்லூர் கூட்டு கூட்டணி திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும்  என்றும் அவ்வாறு வழங்கப்படும் குடிநீர்களுக்கு ஊராட்சி மூலம் கட்டணம் செலுத்த தயாராகவும் உள்ளனர். எனவே 2  மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    No comments