• Breaking News

    கீழையூா் அருகே சோழவித்தியாபுரம் புனித சந்தன மாதா திருத்தல ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது


    நாகை மாவட்டம் சோழவித்தியாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்  பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது.

    தஞ்சை மறைமாவட்ட பொருளாளர் எஸ்.ஜேசுராஜ்   தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சாகுபடிக்கான தேவையார நீர் கிடைத்து விவசாயம் செழிக்க எதுவாக சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது.தொடா்ந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.பின்னர் கண்கவர் வானவேடிக்கையுடன் புனிதம் செய்யப்பட்ட கொடி  ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தோ்பவனி ஜூலை 26ஆம் தேதி நடைபெறுகிறது. 

    கொடியேற்ற நிகழ்வில் கேகே பட்டி பங்கு தந்தை டி. டேவிட் தனராஜ், சோழவித்தியாபுரம் திருத்தல பேராலய தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா், சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவா் வீ. சுந்தர்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன் 


    No comments