பொன்னேரி வட்டாரத்தில் நான்கு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்தில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, ஓர் அணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் நந்தியம்பாக்கம, மீஞ்சூர் பேரூராட்சி மூன்றாவது வார்டு பெருமாள் கோயில் தெருவில், மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்தில் அடங்கிய நெய்தவாயல், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் பழவேற்காட்டு, உள்ளிட்ட நான்கு இடங்களில் முகாம் நடைபெற்றது.
இம் முகாமிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமைவகித்தார், மாவட்ட அவை தலைவர் மு.பகலவன், தொகுதி பார்வையாளர் சுரேஷ் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஆர்.டி. உதயசூரியன், ஆ .ராஜா, முரளிதரன், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், பழவை அலவி,உள்ளிட்டவர்கள் முன்னிலையில் பாக முகவர்கள், கிளைக் கழக செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் ஒருங்கிணைந்து வீடு வீடாகச் சென்று திராவிட முன்னேற்ற கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் புதிய உறுப்பினர்களை சேர்த்தனர்.இதில் வீரன், பழனி,கன்னிமுத்து, உன்கிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments