பலத்த காற்றுடன் மழை..... ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடல்
அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால் ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ளன. அதன்படி, பைன் பாரஸ், ட்ரீ பார்க், தொட்டபெட்டா காட்சி முனை ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
No comments