தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் சந்திப்பு
ஈரோடு மாவட்டம், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவரும் , தமிழ்நாடு அரசின் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் கே.எஸ் ராஜ் கவுண்டர் நேரில் சந்தித்து பேசினார். அப்பொழுது வருகிற 30- 11- 2025 அன்று ஈரோட்டில் நடைபெறும் புதிய திராவிடர் கழகத்தின் 6-வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
உடன் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும் , முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ .பிரகாஷ் மற்றும் புதிய திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் இம்மானுவேல் நாடார், மாநில பொருளாளர் காடையார் சரவணன் ,கரூர் மாவட்ட செயலாளர் சந்தோஷ் , ஈரோடு மாவட்ட செயலாளர் ராஜேஷ் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments