• Breaking News

    கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டை வீசிய மர்ம நபர்கள்

     


    சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் மர்ம நபர்கள் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

    சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமதித்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments