• Breaking News

    தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் பள்ளிக்காரணை பாபா ஸ்மார்ட் ஜீனியஸ் செஸ் அகாடமியின் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை பாபா ஸ்மார்ட் ஜீனியஸ் செஸ் அகாடமியின் முதல் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 240 வீரர்கள் பங்கு பெற்றனர். 7 , 11, 13, 16 வயதினருக்கான இப்போட்டிகள் 5 சுற்றுகளாக நடைபெற்று முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த ஆண்கள் பெண்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் என மொத்தம் 80 பேர்களுக்கு மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பாபா ஸ்மார்ட் ஜீனியஸ் அகாடமி தலைவர் கவிதா சரவணன் வெற்றி கோப்பை களை வழங்கினார்.

    போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய அனைத்து வீரர் களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பாபா ஸ்மார்ட் ஜீனியஸ் அகாடமி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்.

    No comments