திமுக மாணவரணி அமைப்பாளருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருகே பகுதியில், திமுக மாணவரணி அமைப்பாளர் அகமது ஜும்மா மீது அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாளால் வெட்டித் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற அகமது ஜும்மாவை வழிமறித்த அந்த கும்பல், யாருக்கும் தெரியாமல் திடீரென அறிவாளை எடுத்து மீது தாக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அகமது ஜும்மா, அருகிலுள்ள பொதுமக்கள் மற்றும் அவரது நண்பர்களால் உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை வளாகத்தில் பரவிய தகவல் கூறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தாக்குதலுக்கான காரணம் என்ன? அரசியல் வேஷம், பழைய விரோதம், அல்லது தனிப்பட்ட கணக்கு என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒருபுறம் திமுக வட்டாரத்திலும் இந்த தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். கும்பலை அடையாளம் காணும் விதமாக சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் கொண்டு தடையின்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments