• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பேரணி பொதுக்கூட்டம்..... கடலூர் இள. புகழேந்தி பங்கேற்பு.....


    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மீஞ்சூர் பஜார் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு ஒற்றுமை பேரணி மற்றும் , நல திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார்.

     மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி,கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே, சுப்பிரமணி,ராமமூர்த்தி, பா.சே.குணசேகரன், வெங்கடாசலபதி, கே.பரிமளம், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பணிகுழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, பொன்னேரி தொகுதி பார்வையாளர் கா. அமுதரசன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாணவர்கள் முதல் மகளிர் வரை செய்து வரும் பல்வேறு நல திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் சிறப்பான முறையில் எடுத்துக்கூறினர், இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் சி.எச்.சேகர்,அன்புவாணன், வழக்கறிஞர் ஏ.கே.சுரேஷ், டி.கே. சந்திரசேகர், ஆ.சத்திய வேலு, ஆ.ராஜா, மு. முரளிதரன், வே.ஆனந்த் குமார், இரா,அறிவழகன், பி.முத்து, வல்லூர் தமிழரசன், ருக்மணி மோகன்ராஜ்,அப்துல்ரஷீத், ராஜேந்திரன்,கணேஷ், மோகன்,ஜோதி,லெனின், மணிமாறன், செந்தமிழ் சசி,சாமிவேல், மதன்குமார்,அன்சர் பாஷா, டில்லி, புருஷோத்தமன், தமிழரசன்,கலைவாணன்,உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சியின் முன்னதாக ஓரணியில் தமிழ்நாடு ஒற்றுமை பேரணி பஜார் பகுதியில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ் அவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்து கைகளில் தமிழகம் வெல்லும் உள்ளிட்ட வாசகம் பொருந்திய பேனர்களை கைகளில் ஏந்தி அனைத்து பொதுமக்களும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.கூட்டத்தின் இறுதியில் மீஞ்சூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் பா. அலெக்சாண்டர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    No comments